All India Occupational Therapists Association along with Saveetha College of Occupational Therapy has conducted the 60th Annual National Conference. Smt. Jacintha Lazarus, IAS, Comissioner for Welfare of Differently Abled Tamil Nadu had been invited as the guest of honour for the OTICON 2023 conference and she has inaugurated the function by lighting the lamp.
The chancellor of SIMATS Dr. N.M.Veeraiyan, the vice president of AIOTA Dr. S.K. Meena, the secretary of AIOTA Dr. Joseph sunny, the EC members along with the principal and also the organizing secretary of the AIOTA conference Dr. M. Arun kumar were present in the function.
Smt. Jacintha Lazarus, the guest of honour while giving her speech she has mentioned that being a commissioner for welfare of Differently Abled I have noticed that the role of Occupational therapists is very clear in the rehabilitation of differently abled people.
Tamilnadu government is going to do a project with a budget of 1000 crores in which the contribution of Occupational Therapists is going to be high. The principal of Saveetha College of Occupational Therapy and also the organizing secretary of this AIOTA conference has created the book titled "TAMILNADU OCCUPATIONAL THERAPISTS' CLINICAL DIRECTORY" and launched in this event. Smt.Jacintha Lazarus, the commissioner has praised by saying that the book is useful to know the details of where occupational therapists services are provided. Dr. N.M. Veeraiyan, the chancellor of SIMATS while giving his speech has praised the speciality of occupational therapists and the event conducted by Saveetha College of Occupational Therapy. More than 1200 occupational therapy students along with the occupational therapists and AIOTA members have been participated in this useful conference. Useful research compositions, scientific sessions and entertaining cultural programs have been held on this february 3rd, 4th and 5th.
அகில இந்திய செயல்முறை மருத்துவ சங்கம் மற்றும் சவீதா செயல்முறை மருத்துவக் கல்லூரி இணைந்து, 60 - ஆவது அகில இந்திய செயல்முறை மருத்துவர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் மரு. ஜசின்தா லாசரஸ் IAS ( Commissioner for welfare of differently abled , Tamilnadu Government) அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் சவீதா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வேந்தர் மரு. N.M. வீரையன் அவர்கள், அகில இந்திய செயல்முறை மருத்துவ சங்கத் துணைத்தலைவர் மரு. S.K. மீனா அவர்கள், செயலாளர் மரு. ஜோசப் சன்னி அவர்கள் , EC உறுப்பினர்கள் மற்றும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் சவீதா செயல்முறை மருத்துவக் கல்லூரி முதல்வருமான மரு. M. அருண்குமார் அவர்களும் உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி ஆணையர் பேசும்பொழுது , மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வில் செயல்முறை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசு 1000 கோடி மதிப்பிலான செயல்திட்டத்தை ஏற்படுத்த உள்ளது. அதில் செயல்முறை மருத்துவத்தின் பங்களிப்பை பெருமளவில் சேர்க்க உள்ளனர். இந்த நிகழ்வில் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் சவீதா செயல்முறை மருத்துவக் கல்லூரி முதல்வருமான மரு. M. அருண்குமார் அவர்களால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு செயல்முறை மருத்துவர்களின் நிறுவனத்தின் விவரப்புத்தகம் வெளியிடப்பட்டது. இது தமிழ்நாட்டில் செயல்முறை மருத்துவ சேவை எங்கெங்கு கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆணையர்கள் மிகவும் பாராட்டினர். சவீதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் அவர்கள் பேசும்பொழுது, செயல்முறை மருத்துவத்தின் சிறப்பையும் சவீதா செயல்முறை மருத்துவக் கல்லூரியின் இந்த செயலையும் பாராட்டினார். இந்த நிகழ்வில் 1200 - க்கும் மேற்பட்ட மாணவர்கள், செயல்முறை மருத்துவர்கள் மற்றும் அகில இந்திய செயல்முறை மருத்துவ சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த பிப்ரவரி 3,4 & 5 நாட்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், பயிற்சிக் கருத்தரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சி செயல்முறை மருத்துவ மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Comments